அற்றைத் திங்கள்..... வலையொலியில் தமிழொலி
நன்முல்லை
தமிழை வாசித்தும் நேசித்தும் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துப் போகிற நம் பற்றுடைய மனப்பாங்குதான் தமிழ் மொழியின், பண்பாட்டின், தமிழர் வரலாற்றின் தொடர்ச்சிக்கான காரணங்களுள் அடிப்படையானவை எனலாம்.
தமிழை வளர்க்கும் நற்பெயர் நமதென்றால், அதை வளர்க்காத குறையும் நம்முடையதுதானே?
தமிழ் என்ற மொழியும் பண்பாடும் நம் வேர்கள். அந்த வேர்களை, விழுதுகளான நம் பிள்ளைகள் இறுகப் பிடிக்கச் செய்வது நம் கைகளில்தான் உள்ளது.
இல்லையெனில், மரபு மாற்றுப் பயிர்போல, அடையாளம் இல்லாச் சமூகத்தை விட்டுச் செல்லும் பழியும் நம்மையே சேரும்.